தண்டனையை குறைக்க சலுகை கோரப் போவதில்லை: சஞ்சய் தத் கண்ணீர் | சஞ்சய் தத்

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (28/03/2013)

கடைசி தொடர்பு:14:22 (28/03/2013)

தண்டனையை குறைக்க சலுகை கோரப் போவதில்லை: சஞ்சய் தத் கண்ணீர்

தண்டனையை குறைக்க சலுகை எதுவும் கோரப் போவதில்லை  என்று கூறியுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத், ஏப்ரல் மாதத்தில் சரணடையப் போவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறப்பு நீதிமன்றம் 6ஆண்டு சிறை தண்டனை அளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு கீழ் நீதிமன்றம் அளித்த 6 ஆண்டு தண்டனையை 5 ஆண்டாக குறைந்தது.

இதனிடையே, தண்டனையை குறைக்க கோரி சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தி்ல் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போகிறார் என்று தகவல்கள் வெளியானது.

 

இந்த நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சஞ்சய் தத், தண்டனையை குறைக்க சலுகை எதுவும் கோரப் போவதில்லை என்றும் ஏப்ரல் மாதம் தாம் சரணடைய போவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகன் என்று கூறிய சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தின் மீது அதிகபட்ச மரியாதை வைத்துள்ளேன் என்றும் தீர்ப்பையும் அவ்வாறே மதிக்கிறேன் என்றும் கூறினார்.

உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் சரணடைவேன் என்றும் நான் மன்னிப்பு கோருவதற்காக  விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார்.

மன்னிப்புக் கோர விண்ணப்பிக்காததால் அது பற்றிய விவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் இதனை, மக்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

நானும், எனது குடும்பத்தினரும் கவலையில் உள்ளோம் என்று கூறிய சஞ்சய் தத், எனது வாழ்க்கையும் குடும்பத்தினரின் வாழ்க்கையும் கடினமான பாதையில் செல்கிறது என்றார்.

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சஞ்சய் தத், இன்னும் சில நாட்களே உள்ளன என்றும் ஏராளமான பணிகள் பாக்கியுள்ளன என்றார்.

எனது நாட்டை நேசிக்கிறேன், இந்த நாட்டின் குடிமக்களையும் நேசிக்கிறேன் என்றும் சஞ்சய் தத் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close