அடுத்த பக்கத்தை புரட்டும் பாலாஜி !

2012ம் ஆண்டில் சிறுபட்ஜெட்டில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிவந்தது.

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தினைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் அடுத்த படம் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

'நான் கடவுள்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', தற்போது ஜெயம்ரவி நடித்து வரும் 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வாசன் விஷுவல்ஸ் பாலாஜி தரணீதரன் இயக்கும் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறது.

தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் பாலாஜி தரணீதரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!