தாவூத்தும், மும்பை குண்டுவெடிப்பும்! | D-Day, ஸ்ருதிஹாசன், அர்ஜுன் ராம்பால், ரிஷி கபூர்

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:04 (27/05/2013)

தாவூத்தும், மும்பை குண்டுவெடிப்பும்!

நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'D-Day' படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் இயக்குனரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.

இணையத்தில் டிரெய்லரை வெளியிட்டாலும், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் 20 நிமிட காட்சிகளை மட்டும் திரையிட்டு காட்டி இருக்கிறார்.

இப்படத்தில் ரிஷி கபூர், அர்ஜுன் ராம்பால், ஹியுமா குரோஷி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து இருக்கிறார். படத்தினை ஜுலை19ம் தேதி வெளிக் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'D-Day' குறித்து இயக்குனர் நிகில் அத்வானி " எனது 21 வயதில் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு எனது வாழ்க்கையை பாதித்தது. ஆகையால் தான் அதனை தழுவி இப்படத்தினை இயக்கி இருக்கிறேன்.

நான்கு நபர்கள், வெவ்வேறு களங்கள், அனைவருக்கும் ஒரே காரியம் எப்படி ஒன்றிணைந்தார்கள் என்பதே படத்தின் கதை. அவர்களது பயணம், தேர்வு, வெற்றி, தோல்வி என அனைத்தையும் கூறி இருக்கிறேன். எனது படம் இந்தியாவில் தேடப்பட்டு வரும் முக்கியமான நபரை பற்றியது. கதைப்படி அவரை கராச்சியில் இருந்து இந்தியா எப்படி கொண்டுவருகிறார்கள் என்பது தான்.

டிரெய்லரை பார்த்தவர்கள் ரிஷி கபூரின் பாத்திரம் தாவூத் இப்ராஹிம்மை பற்றியது என்கிறார்கள். ஆனால் படத்தில் நான் தாவூத்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. 42 வயதில் ரிஷி கபூர் அந்த பாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்ற போது மிகவும் பெருமையாக இருந்தது. " என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close