ரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் விரைவில் திருமணம்? | ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப்

வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:31 (27/05/2013)

ரன்பீர் கபூர் - கத்ரீனா கைஃப் விரைவில் திருமணம்?

ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் இருவரும் தங்களது காதலை பகிரங்கமாக வெளியுலகிற்கு அறிவிக்க இருக்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவில் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இருவரும் இணைந்தே வருகிறார்களாம்.

பிரபலங்களின் பிறந்த நாள் பார்ட்டிகள் அனைத்திலுமே இணைந்தே கலந்து கொள்கிறார்களாம். முதலாவதாக வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள்.

மே 25ம் தேதி நடைபெற்ற இயக்குனர் கரண் ஜோகர் பிறந்தநாள் பார்ட்டியில் இணைந்து கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள்.  இருவருமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத வரை எதையும் நம்ப முடியாதுதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close