கமல் வேடத்தில் சந்தானம் | சந்தானம், மிர்ச்சி சிவா, கமல், தில்லு முல்லு

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:32 (27/05/2013)

கமல் வேடத்தில் சந்தானம்

ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை மிர்ச்சி சிவா, இஷா தல்வார், பிரகாஷ்ராஜ் நடிக்க மீண்டும் ரீமேக் செய்து இருக்கிறார் பத்ரி. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் இறுதிகாட்சியில் கமல் நடித்து இருப்பார்.

ஆகவே தற்போது ரீமேக்காகி இருக்கும் படத்தில் கமல் வேடத்தில் நடித்து இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

'தில்லு முல்லு' படத்தில் ரஜினி மாட்டிக்கொண்ட போது கமல் தனது வக்கீல் படையுடன் வந்து ரஜினியை காப்பாற்றுவார். அவ்வாறு மிர்ச்சி சிவாவை காப்பாற்றும் வேடத்தில் சந்தானம் நடித்து இருக்கிறாராம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜெனிவாவில் ஜுன் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜுன் 14ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close