தனுஷ் ஒரு அப்பாவி : சோனம் கபூர்! | தனுஷ், சோனம் கபூர், Raanjhanaa

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:35 (27/05/2013)

தனுஷ் ஒரு அப்பாவி : சோனம் கபூர்!

தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் வெளிவர இருக்கும் 'Raanjhanaa' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பு கிடைத்து இருக்கிறது.

தனுஷ் இந்தியில் நடித்து இருக்கும் முதல் படம் என்பதால், தமிழிலும் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து அளித்துள்ள பேட்டியில் சோனம் கபூர் " எனது அப்பா அனில் கபூர், நான் நடித்துள்ள படங்களை பார்த்துவிட்டு எனது நடிப்பைப் பற்றி மட்டுமே பேசுவார்.  ஆனால் Raanjhanaa டிரெயல்ரை பார்த்துவிட்டு தனுஷை பற்றி நீண்ட நேரம் பேசினார்.

அவருக்கு படத்தின் டிரெய்லர் மிகவும் பிடித்து இருந்தது. இயக்குனர் ஆனந்த் சாருக்கு போன் செய்து பாராட்டினார். தனுஷின் நடிப்பு அவருக்கும் பிடித்து போய் விட்டது.

தனுஷ் மாதிரி இருக்கும் மாப்பிள்ளை உங்களுக்கு பிடிக்குமா என்ற கேள்விக்கு " தனுஷ் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் மற்றும் உண்மையானவர். நான் தமிழ்நாட்டிற்கு சென்று தான் அவரை மாதிரி ஒரு மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்.

தனுஷ் மாதிரி ஒரு நல்லவரை பார்க்க முடியாது. அவரது அணுகுமுறையில் எப்போதுமே ஒரு அப்பாவித்தனம் இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close