வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (29/05/2013)

கடைசி தொடர்பு:13:40 (29/05/2013)

'KICK' நாயகி!

Sajid Nadiadwala தயாரித்து, இயக்க இருக்கும் 'KICK' படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க இருப்பது யார்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

அப்படத்தின் நாயகியாக Jacqueline Fernandez ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கில் 2009ல் ரவிதேஜா, இலியானா, ஷாம் நடிப்பில் வெளியான படம் தான் 'KICK'. சுரேந்திர ரெட்டி இயக்கிய அப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 'தில்லாலங்கடி' என்ற பெயரில் ரீமேக்கானது. இந்தி ரீமேக்கில் சல்மான்கான் நடிக்க இருக்கிறார் என்று அறிவித்தார்கள், ஆனால் படம் எப்போது துவங்கும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது அப்படத்தினை தயாரித்து, இயக்க திட்டமிட்டு இருக்கிறார் Sajid Nadiadwala. சல்மான் கான், Jacqueline Fernandez நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். Jacqueline Fernandez  ஏற்கனவே Housefull 2, Race 2 ஆகிய படங்களில் நடித்தவர் Jacqueline Fernandez.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்