ரீமேக் கிங் பிரபுதேவா!

இந்திய திரையுலகில் ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி, அதிலும் வெற்றியும் காண்பவர் பிரபுதேவா.

நடன இயக்குனர், நாயகன், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்ட, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுவர், தற்போது ரீமேக் கிங் என அழைக்கப்படுகிறார்.

இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த படங்களை எடுத்துக் கொண்டால் மூன்று படங்களைத் தவிர அனைத்துமே ரீமேக் படங்கள் தான்.

தெலுங்கில் சித்தார்த், த்ரிஷா இயக்கத்தில் வெளியான 'Nuvvostanante Nenoddantana', பிரபாஸ், த்ரிஷா நடித்த 'Pournami', தமிழில் ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்த 'எங்கேயும் காதல்' ஆகிய படங்கள் மட்டுமே இவரது இயக்கத்தில் வெளியான நேரடி படங்கள்.

இம்மூன்று படங்களைத் தவிர அனைத்துமே ரீமேக் படங்கள் தான். தமிழில் விஜய் நடித்த 'போக்கிரி', தெலுங்கில் சீரஞ்சிவி நடித்த 'Shankardada Zindabad', விஜய் நடித்த 'வில்லு', சல்மான்கான் நடித்த 'Wanted', விஷால் நடித்த 'வெடி', அக்ஷய்குமார் நடித்த 'ரவுடி ரத்தோர்', க்ரிஷ்குமார் நடித்த 'Ramaiya Vasta Vaiya' ஆகிய ரீமேக் படங்களை இயக்கி இருக்கிறார்.

இவற்றில் 'வில்லு', 'வெடி' ஆகிய படங்களைத் தவிர, மீதமுள்ள படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள். ஆகவே தொடர்ச்சியாக ரீமேக் படங்களை மட்டுமே இயக்க தொடங்கிவிட்டார். இந்தியில் இவர் இயக்கிய ரீமேக் படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவிப்பதால், ரீமேக் படம் என்றாலே பிரபுதேவா என்றாகிவிட்டது.

அதுமட்டுமன்றி தெலுங்கில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், அத்தயாரிப்பாளரிடம் பேசி இந்தி ரீமேக் எனக்குத் தரவேண்டும் என்று கூறிவிடுகிறாராம். அவ்வாறு இவர் சமீபத்தில் கூறி இந்தியில் ரீமேக்காக இருக்கும் படம் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்ற 'BAADSHAH'.

மக்களுக்கு பிடித்தவாறு, தயாரிப்பாளர் கல்லாவையும் நிரப்பினால் எந்த படத்தினை இயக்கினால் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!