ஓய்வில் ஷாரூக்கான்!

'Ra.one' படப்பிடிப்பின் போது தோள்பட்டையில் ஷாருக்கானுக்கு அடிபட்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனால் 'Ra.one' படத்தினைத் தொடர்ந்து 'Chennai Express' உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு இருந்ததால், அவர் அறுவை சிகிச்சை செய்யவில்லை. கடந்த 25ம் தேதியன்று 'Chennai Express' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது.

'Chennai Express' படப்பிடிப்பின்போதே அவருக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார் ஷாருக்கான்.

25ம் தேதி படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு தோள்பட்டையில் சுமார் 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சஞ்ச்ய் தேசாய் "ஷாரூக்கானுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியது இருக்கும். அதன் பின்னர் அவர் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க 3 மாத காலங்கள் ஆகும்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!