பாலிவுட் கனவில் ப்ரியாமணி!

'பருத்திவீரன்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. ஆனால், அடுத்தடுத்து அதே மாதிரி கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததும் ஹோம்லி இமேஜ் கிடைச்சிடுமே என்று பயந்தார்.

நான் இனி கிளாமராத்தான் நடிப்பேன் என்று பர பர ஸ்டேட்மென்ட் கொடுத்தும் அம்மணியை யாரும் கண்டுகொள்ளவில்லை. 'மலைக்கோட்டை', 'தோட்டா' போன்ற படங்களில் தாராளம் காட்டியும் கிளாமர் இமேஜ் கைகொடுக்கவில்லை.

இதனால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று ஒதுங்கிக் கொண்டவருக்கு இப்போது கட்டம் சரியில்லை.

ப்ரியாமணியின் மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடப்பதால்  பரபரப்பான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார். தெலுங்குப் படங்களில் சார்மி போன்ற கவர்ச்சி நடிகைகளே ஆடிப்போகும் அளவுக்கு அதிரடி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் ப்ரியாமணி.

சமீபத்தில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஷாரூக்கானுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.  ராஜூசுந்தரம் நடனம் அமைத்த அந்தப் பாடலுக்கு பிரமாண்டமான செட் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'சென்னை எக்ஸ்பிரஸ்'  படம் பாலிவுட்டில் வெளியாகும்போது, அங்கு படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் எனது ஆட்டத்தைப்பார்த்து அதிர்ந்து போவார்கள். அப்படியொரு ஆட்டம் ஆடியிருக்கிறேன். அதன்பிறகு கண்டிப்பாக இந்தியில் இருந்து என்னைத்தேடி படவாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ப்ரியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!