அமீர்கானிற்காக காத்திருக்கும் பில்கேட்ஸ்!

எத்தனையோ உலக பிரபலங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை சந்திப்பதற்காக அப்பாயிண்ட்மென்ட் கேட்டு காத்திருக்க, பில்கேட்ஸோ நம்ம ஊர் அமீர்கானை சந்திக்க காத்திருக்கிறார்!

சினிமா கிசுகிசுக்கள், கால்ஷீட், சம்பளம் என பிஸியாகி விட்ட நடிகர்களுக்கு மத்தியில் யுனிசெபின் தூதுவர், சமூக அவலங்களை பொது ஊடகத்தில் பந்திக்கு வைக்கும் சமூக சேவகர், சமூக பொறுப்புள்ள படங்கள் என அமீர்கான் எப்போதும் தனி ரகம்.

சமீபத்தில் அவர் ஸ்டார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ''சத்யமேவ ஜெயதே'' நிகழ்ச்சி அமீர்கானை இன்னுமொரு பொறுப்புணர்வுள்ள ஐகான் கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதற்காக டைம் பத்திரிக்கை அமீர்கானை தன் அட்டைப்படத்தில் வைத்தெல்லாம் கொளரவித்தது.

அதனைத் தொடர்ந்து உலகின் டாப் பணக்காரர் பில்கேட்ஸின் குட் புக்கிலும் இணைந்து விட்டார் அமீர்கான்.
இது சம்பந்தமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டியிருக்கும் பில்கேட்ஸ்  ''பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்துக் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்திய ''சத்ய மேவ ஜேயதே'' நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன்'' என கூறியுள்ளார்.

பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசன் மூலம் பிகேட்ஸும் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!