இந்திக்குப் போகும் 'காஞ்சனா' | காஞ்சனா, ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய்

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (20/06/2013)

கடைசி தொடர்பு:10:51 (20/06/2013)

இந்திக்குப் போகும் 'காஞ்சனா'

ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் திகிலைக் கிளப்பிய படம் 'காஞ்சனா.'

ஏற்கெனவே மாபெரும் வெற்றி பெற்ற 'முனி' படத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக காஞ்சனாவை எடுத்திருந்தார் லாரன்ஸ்.

தெலுங்கிலும் 'காஞ்சனா' என்ற பெயரிலேயே வெளியிடப்பட்ட இந்தப் படம், அங்கும் வசூலை வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் வெளியாக இருக்கிறது.

புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சஞ்சய் லீலா பன்சாலி, இந்தியின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். 

இந்தியிலும் லாரன்ஸே இயக்குவது எனவும், அவர் நடித்த வேடத்தில் இளம் பாலிவுட் நாயகன் ஒருவரை நடிக்க வைக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சூப்பர்ஹிட் படங்களைத் தந்த பன்சாலி, தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து வருகிறார்.

ஏற்கெனவே, தமிழில் வெளிவந்த 'சிறுத்தை' படத்தின் உரிமையை வாங்கி பிரபுதேவா இயக்கத்தில் 'ரவுடி ரத்தோர்' படத்தைத் தயாரித்தவர் பன்சாலி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close