மும்பை திரும்பினார் மனிஷா கொய்ராலா! | மனிஷா கொய்ராலா

வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (27/06/2013)

கடைசி தொடர்பு:14:17 (27/06/2013)

மும்பை திரும்பினார் மனிஷா கொய்ராலா!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மனிஷா கொய்ராலா, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி உள்ளார்.

1970-ம் ஆண்டி நேபாலில் உள்ள காத்மாண்டுவில் பிறந்தவர் மனிஷா கொய்ராலா. தன்னுடைய 19-வது வயதில் முதன்முதலாக நேபாளப் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் மனிஷா அறிமுகமான படம் மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்.' தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அர்ஜுன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கமலுடன் சேர்ந்து 3 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

நீண்டகாலமாக கோடம்பாக்கம் பக்கம் தலைகாட்டாமல் இருந்தவர், தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில், அவருக்கு மாமியாராக நடித்தார்.

இந்தநிலையில், அவருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மனிஷா, மேல்சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆறுமாத சிகிச்சைக்குப் பிறகு நேற்று மாலை அவர் மும்பை அந்தேரியில் உள்ள அவருடைய வீட்டுக்குத் திரும்பினார். மனிஷா மறுபிறப்பு எடுத்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close