நேரடி இந்திப் படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! | ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (02/07/2013)

கடைசி தொடர்பு:14:42 (02/07/2013)

நேரடி இந்திப் படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழில் வெற்றிபெற்ற 'கஜினி'யை இந்தியில் ரீமேக் செய்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். படம் அங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது 'துப்பாக்கி' படத்தையும் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

எத்தனை நாளைக்குத்தான் தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வது? நேரடியாக ஒரு இந்திப் படத்தை நாமே இயக்கினால் என்ன? என்ற சிந்தனை ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்திருக்கிறது.

சரி, முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று செயலில் இறங்கிவிட்டார் முருகதாஸ். தற்போது 'துப்பாக்கி' ரீமேக் வேலைகள் நடைபெற்று வருவதால், அது முடிந்ததும் விஜய் நடிக்க இருக்கும் படத்தினை இயக்க இருக்கிறார். விஜய் படத்தினை முடித்த பின்னரே இந்திப் பட வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.

முதல் நேரடி இந்திப் படம் என்பதால் எல்லா வேலைகளையும் பிளான் செய்த பின்னரே ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம் முருகதாஸ். அதனால் 2014-ம் ஆண்டு இறுதியில் தான் ஷூட்டிங் இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து தமிழில் 'எங்கேயும் எப்போதும்,' 'வத்திக்குச்சி' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளனர். தற்போது அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கும் 'ராஜா ராணி' படத்தைத் தயாரித்து வருகின்றனர். இப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close