ஹாலிவுட் நடிகருடன் மோதும் 'ஜெயம்' ரவி!

'ஜெயம்' ரவி நடிக்கும் 'பூலோகம்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.  ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப் படம். இதனால் 'ஜெயம்' ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர் நேதன் பிரீன்டன் ஜோன்ஸ் சென்னை வருகிறார்.

இவர் 'டிராய்', ஜாக்கிசானுடன் 'போலீஸ் ஸ்டோரி 4', டோனி ஜாவுடன் 'தூம் யூம் கோங்', ஜெட்லியுடன் 'பியர்லெஸ்' ஆகிய படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.

'பூலோகம்' படத்தில் 'ஜெயம்' ரவியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இருவரும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டைப் போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!