'குவாலிட்டியான படங்கள் தேவை' - ஏ.ஆர்.ரஹ்மான் | நெடுஞ்சாலை, ஏ.ஆர்.ரஹ்மான்

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (02/07/2013)

கடைசி தொடர்பு:14:55 (02/07/2013)

'குவாலிட்டியான படங்கள் தேவை' - ஏ.ஆர்.ரஹ்மான்

ஃபைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் 'நெடுஞ்சாலை'.

சத்யா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில்  நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு பாடல் சி.டி.யை வெளியிட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "இயக்குநர் கிருஷ்ணாவை தாணு சார் தான் என்கிட்ட அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கதை சொல்லும்போது எமோஷனாக சொல்வார். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

பெரிய நடிகர்களின் படத்தைப் போல 'நெடுஞ்சாலை' படத்தை குவாலிட்டியா, பெரிய புராஜக்டா எடுத்திருக்கிறார். படம் பண்ணினால் குவாலிட்டியா பண்ணனும்.

இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா, குவாலிட்டியா படம் இருந்தால்தான் போறேன். இந்தப் படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close