'காமசூத்ரா 3டி' ரெடி! | ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி

வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (10/07/2013)

கடைசி தொடர்பு:10:58 (10/07/2013)

'காமசூத்ரா 3டி' ரெடி!

வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி 'காமசூத்ரா 3டி' உலகம் முழுவதும் ரிலீஸாகும் என இயக்குநர் ரூபேஷ் பால் தெரிவித்து உள்ளார்.

ஷெர்லின் சோப்ரா நடித்துள்ள இந்தப் படம் எப்போது வெளிவரும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு, இயக்குநரின் அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

எடிட்டிங் உள்பட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளதாம்.

இதனால்தான் ரிலீஸ் தேதியை அறிவித்து இப்போதே ரசிகர்களை 'ஜொள்' வடிய வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஷெர்லின் சோப்ராவுக்கான ஆடைகளை ஸ்பெஷலாக வடிவமைத்துள்ளார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா. 'ஜோதா அக்பர்', 'தேவ்தாஸ்' போன்ற படங்களுக்காகத் தேசிய விருது வென்றவர் இவர்.

தற்போது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் அனுஷ்கா நடித்து வரும் 'ராணி ருத்ரம்மா தேவி' படத்திற்கும் இவர்தான் காஸ்ட்யூம் டிசைனர்.

இந்திய ரசிகர்கள், உலக ரசிகர்கள், தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் என தரம்பிரித்து, அதற்கேற்ப படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close