பயந்து நடுங்கிய இலியானா!

சண்டைக் காட்சிகளில் நடிக்க இலியானா பயந்து நடுங்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அசின், காஜல் அகர்வாலைத்  தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் இலியானா.

விஜயசாந்தி, அனுஷ்கா போல் இலியானா சண்டைக் காட்சிகளில் நடித்ததில்லை. இந்நிலையில், ‘படா போஸ்டர் நிக்லா ஹீரோ’ என்ற இந்திப் படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக நடிக்கிறார் இலியானா. இதில், தென்னிந்தியப் படங்களில் இடம்பெறுவதுபோல் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் இலியானா நடிக்க வேண்டி இருந்தது.

இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி சண்டைக் காட்சியை விளக்கியதும் இலியானா தயங்கியபடி, ‘ஆக்ஷன் காட்சிகள் என்றாலே பயம். என்னால் நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை' என்றிருக்கிறார். ஷாஹித், ‘பயப்படாமல் நடியுங்கள்’ என்று தைரியம் சொன்னார்.

'என்னுடைய தோல் ரொம்பவும் மென்மையானது. லேசாக உரசினாலே காயம் ஏற்படும். எனவேதான், சண்டைக் காட்சிகளில் நடிக்க பயம்' என்று மீண்டும் ஆக்ஷன் காட்சியைத் தவிர்க்கப் பார்த்தார் இலியானா.

கோபமான இயக்குநர், அவரை விடுவதாக இல்லை. காட்சிப்படி ஹீரோயின் சண்டைக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

அரைமணி நேரம் அவருக்குத் தைரியம் தந்து, ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்கான டிப்ஸ்களைத் தந்தார் ஷாஹித். அதை ஏற்று சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு முன் ஒத்திகையில் ஈடுபட்டார் இலியானா. இருந்தாலும் பயம் போகவே இல்லையாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!