3 நாட்களில் ரூ.100 கோடி!

திரைக்கு வந்த நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம்.

ஷாருக் கான், தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்.' கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸானது.

தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தலைவா', தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi' ஆகிய படங்களும் கடந்த வாரம் ரிலீஸாவதாக இருந்தன.

விஜய் - அமலா பால் நடிப்பில் உருவான 'தலைவா', சில பிரச்னைகளால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. அதேபோல, கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'Atharintiki Daredi', தனித் தெலுங்கானா பிரச்னையால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இரண்டு படங்களுமே ரிலீஸாகாத நிலையில், அந்தப் படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளை 'சென்னை எக்ஸ்பிரஸ்' கைப்பற்றியது.

வெளியான முதல் வாரத்திலேயே 100 கோடியை தாண்டியது, முதல் நாளில் 33.12 கோடி வசூல், இரண்டாம் நாளில் 28.05 கோடி, மூன்றாம் நாளில் 32.50 கோடி, வியாழக்கிழமை திரையிடப்பட்ட பீரிமியர் ஷோ வகையில் 6.75 கோடி என அனைத்திலும் சாதனை படைத்து இருக்கிறது

இதனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் படத்தின் வசூல் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!