தயாரிப்பாளர் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

தன்னுடைய இசையால் உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போகிறார்.

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி 'நான்' படத்தைத் தயாரித்ததோடு, அந்தப் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் 'மதயானைக் கூட்டம்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

அவர்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் தயாரிப்புக் களத்தில் குதிக்கிறார். இதற்காக  YM Movies என்ற தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார்.

முதன்முதலாக இந்திப் படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவருடன் இராஸ் நிறுவனம் கைகோர்த்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தினைத் தயாரிப்பதோடு, கதை மற்றும் திரைக்கதையையும் ரஹ்மானே எழுதி உள்ளார். இந்திய மற்றும் சர்வதேச கலைஞர்களின் உதவியுடன் கதையை தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இது காதல், கலை, தன்னைக் கண்டறிதல் ஆகிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!