ஹாலிவுட்டுக்குப் போகும் ஜரீன்கான்! | ஜரீன்கான், விக்ரம், கரிகாலன், ஹாலிவுட், நான் ராஜாவாகப் போகிறேன்

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (30/08/2013)

கடைசி தொடர்பு:15:22 (30/08/2013)

ஹாலிவுட்டுக்குப் போகும் ஜரீன்கான்!

பார்ப்பதற்கு காத்ரீனா கைஃப் தங்கச்சி போலவே இருக்கிறார் ஜரீன்கான். 'கரிகாலன்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆன பாலிவுட் நடிகை.

சமீபத்தில் ரிலீஸான 'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் முரட்டு ஆட்களுடன் முக்காபுலா ஆட்டம் ஆடியவர், இப்போது ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.  

'' 'கரிகாலன்'ல விக்ரம் ஜோடின்னு கமிட் ஆனதும் சந்தோஷப்பட்டேன். ஆனா, படம் என்னாச்சு? டிராப்பா? தள்ளிப்போகுதா? நோ ஐடியா. என்ன நடக்குதுன்னே தெரியலை. அதைப்பத்தி யோசிக்காம இப்போ ஹாலிவுட் போறேன்.

ஃபாரீன் ஏஞ்சல் நாவல் எழுதுன டேனியல் சில்வா 'சிமெரா' படம் பண்றாரு. நான் இதுல ஹீரோயினா நடிக்குறேன். இவ்வளவு சீக்கிரத்துல ஹாலிவுட் போவேன்னு எதிர்பார்க்கலை.  

ஹீரோயினா நடிக்குறதும், அயிட்டம் சாங் பண்றதும் பாலிவுட்ல சாதாரணம். அயிட்டம் சாங் எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன்னா, பரதநாட்டியம், வெஸ்டர்ன், பெல்லி, சல்சா, கதக்னு எல்லா பெர்பாமன்ஸுக்கும் தீனி போடுற ஏரியா.  

இதுக்கு ஸ்கோப் தர்ற சிங்கிள் டான்ஸ்னா அப்பீலே இல்லாம டபுள் ஓ.கே. சொல்லிடுவேன். அதேசமயம் அயிட்டம் சாங் மட்டுமே பண்ற பொண்ணுங்கிற முத்திரை விழுந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கேன்! " என்கிறார் ஜரீன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close