சம்பளம் வாங்காத நடிகர்!

வித்தியாச நடிப்புக்குப் பேர்போனவர் பாலிவுட் நடிகர் நவாஜுத்தீன் சித்திகி. 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்- 2' ஹீரோ!

'தலாஷ்', 'பான்சிங் தோமர்', 'பீப்ளி லைவ்' போன்ற படங்களில் மிரட்டல் நடிப்பில் கவனம் ஈர்த்தவர். இப்போது 'தி மௌண்டன் மேன்' என்ற பைலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார்.

பீகாரில் தனியொரு மனிதனாக மலையைக் குடைந்து பாதையமைத்த‌ தஷ்ரத் மாஞ்சியை ஞாபகம் இருக்கிறதா?

1967‍ல் ஆரம்பித்து 1988‍ல் முடிந்த அந்த உலகின் மிகக் கடுமையன தனிமனித உழைப்பு அது.

அவர் இறப்புக்குப்பின் மீடியா உலகம் அவ்வளவாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. மலையைச் சுற்றி 75 கி.மீ பீகாரின் காலூரிலிருந்து அமேதிக்குப் பயணப்பட்ட மக்கள் இப்போது ஒரு கிலோமீட்டருக்குள் பயணம் செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் மாஞ்சிப்போட்ட பாதைதான்!

சிலமாதங்களுக்கு முன் தார் ரோடு போடவும், அவருக்கு பத்மஸ்ரீ விருதினைக் கொடுக்கவும் மாநில அரசு,  மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. எல்லாம் பேப்பரோடு அறிக்கைகளாக மட்டுமே இருக்கிறது.


பாலிவுட் டைரக்டர் கேத்தன் மேத்தா டைரக்ஷனில் 'தி மௌன்ட்டன் மேன்' இந்தி மற்றும் ஆங்கிலம் பேச இருக்கிறார். சம்பளம் வாங்காமல் மாஞ்சிக்கு உயிர் கொடுக்க இருக்கிறார் நவாஜுத்தீன் சித்திகி
நல்ல முயற்சி!

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!