சச்சின் வேடத்தில் நடிக்க ஆசை! | ஆமிர்கான், சச்சின், aamirkhan, sachin

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (16/11/2013)

கடைசி தொடர்பு:18:28 (16/11/2013)

சச்சின் வேடத்தில் நடிக்க ஆசை!

பாலிவுட்டில் வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் போனவர் ஆமிர்கான்.

கமர்ஷியல் சினிமாவில் நடித்துக்கொண்டே, மாற்று சினிமாவுக்கும் முக்கியத்துவம் தரும் ஆமிர்கானின் சினிமா காதல் சொல்லித் தீராதது.

ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று ஆமிர்கான் இப்போதும் விரும்புகிறார்.

'லகான்' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்த ஆமிர்கானுக்கு சச்சின் மேல் பெரும் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

சச்சின் ஓய்வு பெறும் இந்தத் தருணத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஆமிர்கான்.

''சச்சின் பற்றி படம் எடுத்தால், அதில் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

சச்சின் வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close