அமிதாப், அக்ஷராஹாசனுடன் பாலிவுட்டில் நடிக்கும் தனுஷ்? | அமிதாப்பச்சன், அக்ஷராஹாசன், தனுஷ், amithabpachan, aksharahasan, dhanush

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (18/11/2013)

கடைசி தொடர்பு:14:49 (18/11/2013)

அமிதாப், அக்ஷராஹாசனுடன் பாலிவுட்டில் நடிக்கும் தனுஷ்?

'பா' படம் இயக்கிய பால்கி தன் அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்கத் தயாராகிவிட்டார்.

இதில் அமிதாப்பச்சனுடன் தனுஷும் நடிக்கிறாராம். தனுஷ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

'ராஞ்சனா' படத்தின் மூலம் தனுஷை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால், தயக்கம் இல்லாமல் நடிக்க தனுஷ் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா நடிக்கிறாராம். அக்ஷராவை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர். தற்போதைக்கு நடிப்பு வேண்டாம் என்று உதவி இயக்குநராக இருக்கிறார் , அக்ஷரா.

பால்கி சொன்ன கதையின் ஈர்ப்பால் அக்ஷரா நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக ஹீரோயினாக நடிக்கிறார், அக்ஷரா. 

படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார். அநேகமாக பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

2014ம் ஆண்டின் துவக்கத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close