பிச்சைக்காரன் கேரக்டரில் வித்யாபாலன்! | வித்யாபாலன், vidyabalan

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (03/12/2013)

கடைசி தொடர்பு:18:58 (03/12/2013)

பிச்சைக்காரன் கேரக்டரில் வித்யாபாலன்!

தியா மிர்ஸா தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகும் படம் 'பாபி ஜஸூஸ்'. வித்தியாசங்களை விரும்பி ஏற்கும் வித்யாபாலன் இதில் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.

இதுவரை நடித்த படங்களை விட இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் வித்யாபாலன்.

இந்தப் படத்திற்காக ஹோம் ஒர்க் செய்து நிறைய ஸ்டடி செய்து நடித்து வருகிறாராம்.

படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனாக நடிக்க வேண்டியிருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரனாக வித்யா மாறி இருக்கிறார்.

பிச்சைக்கார கெட்டப்புடன் ஹைதராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து விட்டனர் வித்யாவை. யாருக்குமே சுத்தமாக அவரை அடையாளம் தெரியவில்லையாம்.

நிஜமாகவே அவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து காசு போட்டு மக்கள் கடந்துபோனார்களாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close