கோச்சடையானில் டப்பிங் பேச ஆசைப்பட்ட தீபிகா படுகோனே! | தீபிகா படுகோனே, deepika padukone

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (12/12/2013)

கடைசி தொடர்பு:14:45 (12/12/2013)

கோச்சடையானில் டப்பிங் பேச ஆசைப்பட்ட தீபிகா படுகோனே!

பாலிவுட்டில் தீபிகா படுகோனே  நடிக்கும் படங்கள் நூறு கோடி வசூலை அள்ளுகின்றன. அந்த அளவுக்கு மோஸ்ட் வான்டட் நடிகை ஆகிவிட்டார் தீபிகா.

தீபிகா பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால், இந்தியைத்  தாய் மொழியாகக் கொண்ட நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நம்பர் ஒன்னாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

தீபிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச வரும்.  'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில், தீபிகாவே சொந்த குரலில், தமிழ் பேசியிருந்தார்.

ஆனாலும், அது, அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. படத்தில் பார்த்தபோது அவர் பேசிய வசனங்கள் தமிழ் ரசிகர்களுக்கு சரியாகப் புரியவில்லை என வருத்தப்பட்டார். 

இதனால், 'கோச்சடையான்' படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசலாம் என்ற முடிவைக் கைவிட்டார் தீபிகா.  

தமிழ் பேசும் ஆசைக்குத் தற்காலிகமாக முட்டுக் கட்டை போட்டுள்ளார். இதனால், கோச்சடையான் படத்தில், அவருக்காக, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் குரல் கொடுத்துள்ளார்.

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close