காதல் மனைவியைப் பிரிகிறார் ஹ்ரித்திக் ரோஷன்!

பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ஹ்ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம்.

நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர்(சுசன்னே) தீர்மானித்துவிட்டார், இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் என்  ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது. இதிலிருந்து நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்''  என்று ஹ்ரித்திக் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுசன்னேவின் தந்தை நடிகர் சஞ்சய்கான் ''இதை முடிவு என்று கருதுவது தவறு.  அவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரியவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!