தனுஷுக்கு உதவும் அமிதாப்! | தனுஷ், அமிதாப், dhanush, amithab

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (30/12/2013)

கடைசி தொடர்பு:12:50 (30/12/2013)

தனுஷுக்கு உதவும் அமிதாப்!

'ராஞ்சனா' படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்து  பாலிவுட் கொண்டாடியது.

தற்போது தனுஷ் வருடத்திற்கு ஒரு இந்திப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.

மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.

காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டதாம்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.

இதில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிக்கிறாராம். அமிதாப் இதற்கு உதவுகிறாராம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close