மீண்டும் இணையும் விஜய் - ப்ரியங்கா சோப்ரா! | விஜய், vijay, ப்ரியங்கா சோப்ரா, priyanka chopra

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (06/01/2014)

கடைசி தொடர்பு:18:13 (06/01/2014)

மீண்டும் இணையும் விஜய் - ப்ரியங்கா சோப்ரா!

'ஜில்லா'வுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லபப்டுகிறது.

இந்நிலையில்  வேறொரு புதிய படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார், விஜய்.

 நீண்டகாலமாக விஜய்யின் மேனேஜராகப் பணிபுரியும் பி.டி. செல்வகுமாரைத் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்கப் போகிறாராம், விஜய்.

ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்த பிறகு இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் . 2014ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக  ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருக்கிறாராம். 'தமிழன்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது.

ஜூன் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். இயக்குநர் யார் என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்