மாதுரி இஸ் பேக்! | madhuri dixit, மாதுரி தீக்ஷித்

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (17/01/2014)

கடைசி தொடர்பு:15:25 (17/01/2014)

மாதுரி இஸ் பேக்!

 

 

மாதுரி தீட்சித் ரசிகரா நீங்கள்? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. மாதுரி இஸ் பேக்! அதே பழைய ஃபார்மில் பட்டையைக் கிளப்பப்போகிறார் 'தேட் இஸ்க்கியா’ என்ற பாலிவுட் படத்தில்.

2010-ல் அபிஷேக் சௌபேவின் இயக்கத்தில் வித்யா பாலன் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம் 'இஸ்க்கியா’வின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு சிம்பிளாய் ஒன்லைன். ஒரு பெரிய தாதாவின் விதவை மனைவி தன் சுயநலத்துக்காக இரண்டு திருட்டுப்பசங்களைப் பயன்படுத்திக்கொள்வதும் அந்த தாதா உண்மையில் இறக்கவில்லை என்பதும் பிறகு ஏன் இந்த இருவரையும் பயன்படுத்தினாள் என்பதும் ஜிகுஜிகு த்ரில்லராக திரையில் கிளைமாக்ஸாக விரிந்த படம்.

வித்யா பாலன் கேரியரில் 'இஸ்க்கியா’ முக்கியமான படம். திருட்டு பார்ட்டிகளாக சீனியர் நஸ்ருதீன் ஷாவும் அர்ஷத் வர்சியும் நடித்திருந்தார்கள். அந்த இளம் விதவையைக் காதலித்த இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்பதைப் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  'தேட் இஸ்க்கியா’ என்றால் இந்தியில் 'ஒன்றரைக் காதல்’ என்று அர்த்தம். இந்த ஒன்றரைக் காதல் படத்தில் மாதுரிக்கு என்ன வேலை? படத்தில் பேகம் பரா என்ற பவர்ஃபுல் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கதக் டான்ஸர் மற்றும் கஜல் பாடகியாக வருகிறார். முதல் பாகத்தில் வித்யா பாலனை 50 ப்ளஸ் நஸ்ருதீன் ஷாவும் 30 ப்ளஸ் அர்ஷத் வர்சியும் போட்டி போட்டு டாவடித்து பல்பு வாங்குவார்கள். இந்தப் படத்திலும் அதே இருவர் நடித்திருக்கிறார்கள். அர்ஷத்தின் ஜோடி பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஹியூமா குரேசி. நெகுநெகு உயரத்தில் டிஸ்டம்பர் ரோஸ் வண்ணத்தில் இருக்கும் ஹியூமாவுக்கும் மாதுரிக்கும் ஹாட் டான்ஸ் மூவ்மென்ட்ஸும் உண்டு. முதல் பாகத்தைவிட இந்தப் படம் காமெடியிலும் த்ரில்லர் ஸ்கிரீன் திரைக்கதையிலும் பட்டையைக் கிளப்புதாம்.  

முக்கியமாக படத்தில் ரஹ்மான் இசைக்கு செம டஃப் கொடுக்கிறார் இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர், தயாரிப்பாளர் மற்றும் இசை அமைப்பாளரான விஷால் பரத்வாஜ். 'ஹமரி அடரியா...’ என்ற பாடலின் இசைக்கும் அதற்கு மாதுரி கொடுத்திருக்கும் நளினமான மூவ்மென்ட்ஸ்களுக்குமே (நடனம் - 'விஸ்வரூபம்’ புகழ் பண்டிட் பிர்ஜு மகராஜ்) படம் '100 க்ரோர் க்ளப்’பில் சேர்ந்துவிடும் என இப்போதே சத்தியம் செய்கிறார்கள். அதெல்லாம் கிடக்கட்டும். பாஸ்... மாதுரி பாஸ்!

-ஆர்.சரண் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close