'ஆரம்பம்' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார்! | அஜித், அக்ஷய் குமார், akshay kumar, ajith

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (25/02/2014)

கடைசி தொடர்பு:18:12 (25/02/2014)

'ஆரம்பம்' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார்!

இந்தியில் ஹிட்டாகும் படங்களை ரீமேக் செய்வதைப் போல, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஹிட்டாகும் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
 
இந்நிலையில் 2013 தீபாவளியில் சரவெடியாய் வெடித்த அஜித்தின் 'ஆரம்பம்' படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கிறார் அக்ஷய் குமார்.

ஏ.ஆர். முருகதாஸ் தமிழில் விஜய்யை வைத்து எடுத்த 'துப்பாக்கி' படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.'ஹாலிடே' என டைட்டில் வைத்திருக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார் தான் ஹீரோ.

விஜயகாந்த், சிம்ரன் நடித்த 'ரமணா' படத்தை க்ரிஷ் என்பவர் இந்தியில் 'கப்பார்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
 
தற்போது 'ஆரம்பம்' அஜித் கேரக்டரிலும் அக்ஷய் நடிக்கிறார். இதற்கான ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார். டைரக்டர், ஹீரோயின் யார் என்பதெல்லாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close