பொது இடத்தில் டாப்ஸிக்கு திடீர் முத்தம் தந்த ஹீரோ!

'ஆடுகளம்', 'வந்தான் வென்றான்' 'ஆரம்பம்' படங்களில் நடித்தவர் டாப்ஸி. இப்போது 'முனி 3 கங்கா' எனும் தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்குப் படங்களிலும் கவனம் செலுத்தும் டாப்ஸி பாலிவுட்டில் 'சாஷ்மீ பத்தோர்' படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து, அமித் ராய் இயக்கத்தில் 'ரன்னிங் ஷாதி.காம்' படத்தில் நடித்தார். அமித் சத் தான் இந்தப் படத்தின் ஹீரோ.

ரொமான்டிக் காமெடி என்டர்டெயினர் படமாக 'ரன்னிங் ஷாதி.காம்' உருவாகி இருக்கிறது. சமீபத்தில் 'ரன்னிங் ஷாதி.காம்' படத்தின் புரொமோஷன் மும்பையில் நடந்தது. இதில் அமித் சத், டாப்ஸி ஆகியோர் கலந்துகொண்டமர்.

அப்போது எதிர்பாராத விதமாக டாப்ஸியின் கன்னத்தில் திடீரென்று முத்தமிட்டார் அமித் சத். உண்மையில் இது எதிர்பாராமல் நடந்ததா? பப்ளிசிட்டிக்காகவா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!