இது கிளுகிளுப்பு பேய் | ragini mms 2, sunny leone, சன்னி லியோன், ராகினி எம் எம் எஸ் 2

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (11/04/2014)

கடைசி தொடர்பு:14:28 (11/04/2014)

இது கிளுகிளுப்பு பேய்

'ஹாரக்ஸ்’ (Horrex) படங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹாரர் மற்றும் செக்ஸ் கலந்த படங்களைத்தான் அப்படி அழைப்பார்கள். அந்த எதிர்பார்ப்போடு வந்திருக்கிறது 'ராகினி எம்எம்எஸ் 2’.  பாலிவுட்டின் கொடூர டேட்டிங் மூவி என்ற அடையாளத்தோடு 2011-ல் ரிலீஸான இதன் முதல் பாகத்தை ராஜ்குமார் ராவ் - கைனாஸ் மோதிவாலா ஜோடி நடிப்பில் பவன் க்ரிபலானி என்பவர் இயக்கி இருந்தார். ஒரு கோடியில் எடுக்கப்பட்ட மிக லோ பட்ஜெட் படம் அது. ஆனால் ஓரளவு வசூல் அள்ளித்தர, இப்போது இரண்டாம் பாகம் ரிலீஸாகி இருக்கிறது. பூஷன் பட்டேல் என்பவர் இயக்கி இருக்கிறார்.  

காட்டுக்குள் டேட்டிங் போகும் நான்கு பேரை துவம்சம் செய்யும் முதல் பாகத்தின் தொடர்ச்சிதான் இந்தக் கதை. முதல் பாகத்தில் தப்பிப் பிழைக்கும் கதாநாயகி ராகினி மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட்டில் இருக்கிறாள். இரண்டாம் பாகம் இங்கிருந்து துவங்குகிறது.

பேய் இருப்பதாகச் சொல்லப்படும் அந்த நிஜ லொக்கேஷனான காட்டு பங்களாவிலேயே தப்பிப் பிழைக்கிறாள் ஒரு பெண். அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சம்பவத்தைப் படமாக்கி காசு பார்க்க ஆசைப்படுகிறார் ஒரு மொக்கை டைரக்டர். ஒரு போர்னோ நடிகை, ராகினி கேரக்டரில் நடிக்க சம்மதிக்கிறார். பேயின் வீட்டுக்கே போய் பேய்க்குப் பேன் பார்க்கும் இந்த விபரீத விளையாட்டு என்ன ஆனது என்பதே இரண்டாம் பாகத்தின் கதை. நமக்கு அதிகம் பழக்கமான ட்விஸ்ட்கள்தான், கண்ணாடி பார்க்கும்போது பின்னால் இருந்து பயமுறுத்தும் பேய்கள், தூங்கிய பிறகு கதவை க்ரீச்சிட வைக்கும் பேய்கள் என க்ளிஷேக்கள் இருந்தாலும் பேய்த்தனமாய் படம் தியேட்டரில் ஓடுவதற்கு ஒரே காரணம் படத்தில் போர்னோ ஸ்டார் கேரக்டரில் நிஜ சன்னி லியோன் நடித்திருப்பதுதான். பேய் பிடித்த பிறகு கொலை செய்ய மட்டும் அல்லாமல் செக்ஸ் பண்ணவும் வெறிகொண்ட வினோதப் பேயை இந்தப் படத்தில் காட்டி கிளுகிளுப்பு உண்டாக்குகிறார்கள்.

சன்னியும் லிப் லாக், டூ பீஸ் என கிக் ஏற்றுகிறார். அலறவைக்கும் பேய்க் காட்சிகளில்கூட தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால் செக்ஸைவிட பேய்த்தனம் கொஞ்சம் தூக்கலாய் இருப்பதால், சன்னி தரிசனத்திற்காக மட்டுமே தியேட்டருக்குப் போனவர்கள் கொஞ்சம் ஏமாந்து போவார்கள்.

ஏகப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு கஷ்டப்பட்டுத் தப்பிப் பிழைத்து பேய் பங்களாவிலிருந்து பலர் பலியாகி மூன்று பேர் எஸ்கேப் ஆகி வந்தாலும் அந்த வீட்டில் இன்னும் பேய் இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் அங்கிருக்கும் பொம்மை நாற்காலி ஆடுகிறது. மூன்றாம் பாகத்துக்கு அச்சாரமாய் எண்ட் கார்டு போடுகிறார்கள்.

சன்னி லியோனைப் பேயாய் பார்க்கும் அளவுக்கு குரூரமானவர்கள் நீங்கள் என்றால், 'ராகினி எம்எம்எஸ் 2’ வைப் பார்த்துத் தொலையுங்கள்!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close