ராணி முகர்ஜியை மணந்தார் ஆதித்யா சோப்ரா!

பிரபல இந்தி  நடிகை ராணி முகர்ஜி. இவர் கரண் ஜோஹர் இயக்கிய 'குச் குச் ஹோத்தா ஹே" படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார்.  கடைசியாக 'பாம்பே டாக்கீஸ்' படத்தில் நடித்தார். தமிழில் கமலுடன் 'ஹேராம்' படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கும் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் சேர்மனும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவிற்கும் இத்தாலியில் நேற்று (21.4.2014) திருமணம் நடந்தது.

ஆதித்யா சோப்ரா மறைந்த இயக்குநர் யாஷ் சோப்ராவின் மகன். மேலும், ஷாரூக் கான் நடித்த "தில்வாலே துனியா லேஜாயேங்கே", "மொஹாபட்டின்", "ரப்னே பனா டி ஜோடி" போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!