வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (13/05/2014)

கடைசி தொடர்பு:12:31 (13/05/2014)

தனுஷ் படத்தில் ஐந்து இயக்குநர்கள்!

ஆனந்த்.எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார் தனுஷ். இவர் தற்போது பால்கி இயக்கும் இந்திப் படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் தனுஷ். தனுஷுடன், அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் போன்றோர் நடிக்கின்றனர்.

தற்போது இவர்களுடன் இந்தியில் பிரபலமான இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ரகேஷ் ஓம்பிரகாஷ் மெஹரா, கரண் ஜோஹர், அனுராக் பாசு, கவுரி ஷிண்டே ஆகிய ஐந்து இயக்குநர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஒரே படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டின் ஐந்து இயக்குநர்களுடன் பழகும் வாய்ப்பு தனுஷுக்குக் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அடுத்த இந்திப் பட வாய்ப்பு இவர்களின் மூலமாகவே நடக்கும் என்று தனுஷுடன் சேர்த்து அப்படக்குழுவே நம்புகிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்