வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (29/05/2014)

கடைசி தொடர்பு:14:53 (29/05/2014)

ஜூலை 18ல் பீட்சா 3டி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளியான படம் 'பீட்சா'. த்ரில்லர் படமான 'பீட்சா' ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் லாபத்தைத் தந்தது.

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் வாங்கினார். இந்தியில் இப்படத்தை அக்‌ஷய் அக்கினேனி இயக்கியிருக்கிறார். ஹீரோவாக அக்‌ஷய் ஓபராய் நடித்திருக்கிறார். பார்வதி ஓமனக்குட்டன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜெயகிருஷ்ணா குமடி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மிக்கி, சுரப் கால்சி, ஷமிர் டான்டன் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர். ’யுத்தம் செய்’, ’முகமூடி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த கே இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்.

3டி தொழிநுட்பத்தில் உருவாகிவரும் இப்படம் ஜூலை 18ல் வெளியாகிறது. இப்படத்தை சித்தார்த் ராய் கபூருடன் இணைந்து, பிஜோய் நம்பியார் தயாரித்திருக்கிறார். யுடிவி ஸ்பாட்பாய் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்