வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (10/06/2014)

கடைசி தொடர்பு:12:31 (10/06/2014)

முருகதாஸின் அடுத்த படம்!

'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்காக வெளிவந்துள்ள 'ஹாலிடே' படம் முருகதாஸூக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

'ஹாலிடே' படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், அடுத்த படத்தையும் இந்தியில் இயக்கத் தயாராகிவிட்டார் முருகதாஸ்.

இந்த முறை ஹீரோயினை மையப்படுத்திய ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளார். சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு  நவம்பரில் தொடங்க இருக்கிறது. இதை முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்து உள்ளார்.

முருகதாஸ் தற்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22ல் வெளிவருகிறது. 'கத்தி' படம் தீபாவளி வெளியீடாக திரையைத் தொட உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்