வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (10/06/2014)

கடைசி தொடர்பு:13:00 (10/06/2014)

மலேசியாவுக்குப் பறந்த அஜித் - கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தின் 25% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. 

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளனர்.அங்கு அஜித் - அனுஷ்கா காதல் காட்சிகளையும், அஜித்தின் அசத்தலான சண்டைக் காட்சிகளையும் எடுக்க உள்ளனர். மலேசியாவில் பத்து நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது.

அனுஷ்கா முதன் முறையாக இதில் சொந்தக் குரலில் பேச இருக்கிறார். அஜித் நடித்த 'பில்லா' படம் மலேசியாவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்