டிவி சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கப் போகிறார். இந்த நாடகத்தில் அமிதாப்பச்சனுடன், சரிகாவும் நடிக்கிறார். ரிபுதாஸ் குப்தா இந்த  நாடகத்தை இயக்குகிறார்.

'யுத்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாடகத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் அமிதாப், "இந்த நாடகத்தில் எனது பெயர், யுதிஷ்திர் சிகாவர். கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தொழிலையும், குடும்பத்தையும், உடல்நலத்தையும் எவ்வாறு யுதிஷ்திர் சிகாவர் கையாள்கிறான் என்பதைத் தான் இந்த நாடகத்தின் மூலம் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்" எனக் கூறினார்.

இந்நாடகத்தின் கிரியேட்டிவ் கன்சல்டன்ட் ஸ்ரீகர், "இந்த நாடகத்தை நான் சினிமாவைப் போன்றுதான்  உணர்கிறேன்" எனக் கூறினார்.

அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, இந்நாடகத்தின் கிரியேட்டிவ் டைரக்டரும், பாலிவுட்டின் முன்னணி இயக்குநருமான அனுராக் காஷ்யப், "ஒரு சினிமாவை திரையில் பார்ப்பது போன்றுதான் இந்த நாடகமும் இருக்கும். அமிதாப் அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சினிமாவில் செய்வது போன்றுதான் இந்த நாடகத்திற்கும் ஸ்கிரிப்ட், சவுண்ட் டிசைனிங், எடிட்டிங் என  எல்லாவற்றையும் தயார் செய்திருக்கிறோம்" எனக் கூறினார்.

அடுத்த மாதம் 'யுத்' நாடகம் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!