பாலிவுட் படத்துக்குப் பிறகு அஜித்தை இயக்கும் முருகதாஸ்! | அஜித், முருகதாஸ், தல, 2015, ajith, murugadoss, thala,

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (13/06/2014)

கடைசி தொடர்பு:14:55 (13/06/2014)

பாலிவுட் படத்துக்குப் பிறகு அஜித்தை இயக்கும் முருகதாஸ்!

'கத்தி' படத்தை  அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை ஹீரோயினாக வைத்து இந்தியில் படம் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாக உள்ள இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை மையமாகக் கொண்டது.

'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது ரஜினியுடன் 'லிங்கா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

இப்படத்தை அடுத்து அஜித்தை இயக்க உள்ளார் முருகதாஸ். 'தீனா' படத்துக்குப் பிறகு அஜித்தும், முருகதாஸூம் இரண்டாவது முறையாக இணைய உள்ளனர். இப்படம் 2015ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்