போட்டியிடும் சல்மான், ஷாருக், ஆமிர்! | Salman khan,Sharukh khan, Amir khan, Kick, Happy new year, P.K, ஷாருக்கான்,சல்மான்கான்,அமீர்கான்,ஹேப்பி நியூ இயர்,கிக்,பி.கே. பாலிவுட்

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (24/06/2014)

கடைசி தொடர்பு:16:45 (24/06/2014)

போட்டியிடும் சல்மான், ஷாருக், ஆமிர்!

சல்மான்கான், ஜேக்குலீன் ஃபெர்னன்டஸ் நடித்து ரம்ஜான் வெளியீடாக வரவுள்ள படம் 'கிக்'. இப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ரவிதேஜா, இலியானா நடிப்பில் வெளியான 'கிக்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

'கிக்' படத்தின் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பை எப்படியும் முறியடிக்க வேண்டும் என முழு மூச்சில் இறங்கியுள்ளார் ஷாருக்கான்.


இதற்கு காரணம் ஃபராஹ் கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் நடித்து தீபாவளி ரிலீசாக வெளிவரவுள்ள 'ஹேப்பி நியூ இயர்' படம் தான்.

இப்படத்தின் புரோமோஷனுக்காக ஆகஸ்டு மாதம் முழுவதும் படத்தின் நடிகர், நடிகைகள் அனைவரும் படத்தின் புரோமோஷனுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என ஷாருக் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த புரமோஷன் ரேஸில் ஷாருக்கானுடன், ஆமிர்கானும் இணைந்துள்ளார். அமீர்கான் அனுஷ்கா ஷர்மா நடித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகி வரும் பி.கே படமும் இந்த வருட டிசம்பர் வெளியீடாக வரவிருக்கிறது.

அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களாக இருந்தாலும், புரமோஷன்களை மட்டும் ஒருவரை ஒருவர் முந்துவதற்காக விரைவாகவே தொடங்குகிறார்கள் இந்த மூன்று கான்களும்.

எது எப்படியாகினும் 2014-ல் மூன்று கான்களின் படங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close