லீலா படத்திற்காக ஐந்து கிலோ எடை குறைத்த சன்னி லியோன்

இந்தி, தென்னிந்தியப் படங்களில் நடிக்கும் சன்னி லியோன்,  'ஜிஸ்சம்' மற்றும்  'ராகினி எம்.எம்.எஸ்-2' படங்கள் மூலம் வசூல் நாயகியாகவும் மாறினார்.

'ராகினி எம்.எம்.எஸ்' படத்தைத் தொடர்ந்து 'லீலா' என்னும் அரசர் கால படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை நடன இயக்குனர் அகமது கான் தயாரிக்க, அகமதுவின் சகோதரர் பாபி கான் இயக்குகிறார்.

அரசிகள் என்றாலே கொடி இடையாக இருக்க வேண்டும் என கருதியுள்ளனர் படக்குழுவினர் .பாபி கான், அகமது கானின் வேண்டுகோளுக்கு இணங்க சன்னி லியோன் ஐந்து கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.இப்படத்தில் பழங்கால பாலிவுட் நடனங்களை அமைக்கப் போவதாவும் இம்மாதிரி நடனங்களில் இதுவரை சன்னி லியோன் நடிக்காததால் மிகவும் புதுமையாக இருக்கும் எனவும் நடன இயக்குனர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

ஆனால் படத்தில் சன்னிக்கு இணையாக நடிக்க கதாநாயகன்தான் இன்னும் கிடைத்தபாடில்லை என அகமது மற்றும் பாபி ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!