வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (28/06/2014)

கடைசி தொடர்பு:14:53 (28/06/2014)

தமிழில் நடிக்கும் ப்ரியங்கா சோப்ராவின் தங்கை!

விமல், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், நடிப்பில் ஆர்.நாகேந்திரன்  இயக்கி வரும் ஆக்‌ஷன் படம் 'நீயெல்லாம் நல்லா வருவடா'. அறிமுக இயக்குநர் ஆர்.நாகேந்திரன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

முன்னனி இயக்குநர்களான சுசி கணேசன் மற்றும் சீமானுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ஆர்.நாகேந்திரன்.

 

இவர் சுசி கணேசனுடன் 'திருட்டுப்பயலே' , 'கந்தசாமி' ஆகிய படங்களிலும்,  சீமானுடன் 'தம்பி', 'வாழ்த்துகள்' ஆகிய படங்களிலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

தற்போது ’நீ எல்லாம் நல்லா வருவடா’  பார்பி ஹன்டா தமிழில் நடிக்கிறார்.இவர் பாலிவுட் ஹீரோயின் , முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ராவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

’நீ எல்லாம் நல்லா வருவடா’  பார்பி ஹண்டா விமலுடன் இணைந்து ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்