ரொமான்ஸுக்கு வயது ஒரு தடையில்லை - வித்யாபாலன் அதிரடி | bobby jasoos, vidya balan , ali fasil, வித்யா பாலனன், பாபி ஜாசூஸ், அலி ஃபாசில்

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (28/06/2014)

கடைசி தொடர்பு:15:29 (28/06/2014)

ரொமான்ஸுக்கு வயது ஒரு தடையில்லை - வித்யாபாலன் அதிரடி

திரையில் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரிக்கு வயது ஒரு தடையில்லை என கூறியுள்ளார் வித்யாபாலன். தற்போது இவருக்கு 36 வயது.

பல முன்னணி இளம் ஹீரோக்களுடன் நாயகியாக நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன். நஸ்ரூதீன் ஷா போன்ற மூத்த நடிகர்களுடனும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன்.ஒரு போதும் எனது ரொமான்ஸ் குறித்தோ, இல்லை கெமிஸ்ட்ரி குறித்தோ யாரும் குறை கூறியதில்லை. எந்த ஹீரோவுடனும் ஈடுபாட்டுடன் நடித்தால் திரையில் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என கூறியிருக்கிறார் வித்யாபாலன்.

’பாபி ஜாசூஸ்’ படத்துக்காக பிச்சைக்காரன் கெட்டப்பில் வித்யாபாலன் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் அமர்ந்த போது, ஒருவர் பிச்சை போட்டு விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது..

சமர் ஷாயிக் இயக்கத்தில் அலி ஃபாஸல் மற்றும் வித்யா பாலன் நடித்துள்ள பாபி ஜாசூஸ் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close