வசூலை அள்ளும் பாபி ஜாசூஸ்! | bobby jassos, vidya balan, bollywood

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (09/07/2014)

கடைசி தொடர்பு:14:46 (09/07/2014)

வசூலை அள்ளும் பாபி ஜாசூஸ்!

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களுக்கு மட்டுமே ஓப்பனிங் கலெக்ஷன் மாஸாக இருக்கும். அவர்களின் படங்களுக்கு நிகரான கலெக்ஷனை வித்யா பாலனின் 'பாபி ஜாசூஸ்' அள்ளி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான வித்யா பாலன் நடித்த 'பாபி ஜாசூஸ்' முதல் நாளிலியே 1.78 கோடி வசூலித்துள்ளது.படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை கிடைத்த வசூல் 10 கோடியைத் தாண்டி இருக்கிறது.

முன்னணி நடிகர்களான சல்மான் , ஷாரூக், அமீர், அக்‌ஷய் போன்ற ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த வசூல் கிடைக்கும்.

ஆனால். வித்யாபாலன்  நடித்த காமெடி த்ரில்லர் 'பாபி ஜாசூஸ்' இந்த அளவிற்கு வசூல் குவித்து வருகிறது.இதில் 12 கெட்டப்புகளில் வித்யாபாலன் தோன்றுகிறார். இது முழுக்க முழுக்க வித்யா பாலனுக்கான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக உழைக்கிறேன். அதற்கான பலன் இது. பொதுவாக ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தும் படங்களுக்கு ஓப்பனிங் இருக்காது.போக போகத்தான் வரவேற்பை பெறும்.

ஆனால், 'பாபி ஜாசூஸ்' படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது” என கூறியுள்ளார் வித்யா பாலன். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close