ஜெனிபர் லோபஸ் கெட்டப்பில் சோனாக்ஷி சின்ஹா ! | sonakshi sinha, yo yo hani singh, pop albom, jennifer lopez ,

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (11/07/2014)

கடைசி தொடர்பு:12:42 (11/07/2014)

ஜெனிபர் லோபஸ் கெட்டப்பில் சோனாக்ஷி சின்ஹா !

பாலிவுட்டின் பிரபல பாப் மற்றும் ஜாஸ் பாடகர் யோ யோ ஹனி சிங் விரைவில் ஒரு பாப் ஆல்பம் வெளியிட உள்ளார். அந்த ஆல்பத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் சோனாக்‌ஷி சின்ஹா வெளியிட்டுள்ளார். அதில் தனது உடல் எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார்.

சோனாக்‌ஷி சின்ஹா அணிந்திருக்கும் உடை ஜெனிஃபர் லோபஸ், பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற பாப் பாடகிகளின் காஸ்ட்யூம் ஸ்டைலில் இருக்கிறது.தொப்பி, லெதர் ஜாக்கெட், டெனிம் ஷர்ட் ஆகிய  அனைத்தும் ஜெனிபர் லோபஸை நினைவுபடுத்தும் விதத்தில் உள்ளது.

சோனாக்‌ஷி சின்ஹா பங்கு பெற இருக்கும் அந்த வீடியோ ஆல்பம் 10 நிமிட டீஸராக வெளியாக உள்ளது எனவும், உலக அளவில் அந்த ஆல்பத்தை வெளியிட இருப்பதாகவும் ஹனி சிங் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close