உடல் எடையை அதிகரித்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்!

'மர்டர்-2' படத்திற்குப் பிறகு ஜாக்குலின் முழு நீள கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் ஜாக்குலின் இந்த படத்திற்காக 5 கிலோ எடையேற்றி பப்ளியாக மாறியுள்ளார்.

இதற்கு முன்பு நடித்த 'மர்டர்-2'ல் இவர் ஒரு மாடல் பாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து வந்த 'ரேஸ்-2' , மற்றும் 'ஹவுஸ்ஃபுல் -2' படங்களில் கல்லூரி மாணவி என்பதால் மிகவும் ஒல்லியாகவே தனது உடலை வைத்திருந்தார்.

தற்போது 'கிக்' படத்தின் கதை மற்றும் பாத்திரத்திற்கு உடல் எடை சற்று அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் நட்யாட்வாலா கூறியுள்ளார்.

'' நட்யாட் தன்னை இதற்காக எடையை குறைக்க சொல்லி வற்புறுத்தவில்லை, அவரது கருத்தாக மட்டுமே அதை என்னிடம் கூறினார். எனக்கும் இந்த உடல் எடை அதிகரிப்பு சரியென தோன்றவே எனது டயட்டை சற்றே தளர்த்தினேன்''  என கூறியுள்ளார் ஃபெர்னாண்டஸ்.

51 கிலோவில் இருந்த ஜாக்குலின் தனது உடல் எடையில் ஐந்து கிலோ ஏற்றி 56 கிலோவாக மாறியுள்ளார்.திரையில் தன்னை சல்மானுடன் காணும்போது அவரது உடல் அமைப்புக்கு தான் சரியான ஜோடியாக காண்பட்டேன் எனவும்,மேலும் நல்ல கெமிஸ்ட்ரி என பலர் பாரட்டியதாகவும் தெரிவித்துள்ளார் ஜாக்குலின்.

ஜூலை 25ம் தேதி 'கிக்' ரிலீஸ் ஆகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!