மேரி கோம் படத்திற்காக உண்மையில் அடி வாங்கிய ப்ரியங்கா சோப்ரா

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை 'மேரி கோம் என்ற பெயரில் உருவாகி வருகிறது.ஓமங் குமார் இயக்கும் இப்படத்தை தயாரிக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் வியாகம்.

மேரி கோம் கதாபாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

சமீபத்தில் கிட்டத்தட்ட மேரி கோம் போன்ற தோற்றத்தில் ப்ரியங்கா சோப்ரா நிற்கும் போஸ்டர் வெளியாகி பரபரப்பை உருவாக்கியது. பிறகு படத்தின் டிரெய்லருக்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தில் ப்ரியங்கா சோப்ராவுடன் நடிக்க உள்ளவர்கள் அனைவரும் உண்மையில் தடகள விளையாட்டு வீரர்களாம்.காரணம் படத்தின் உயிரோட்டம் சற்றும் குறைந்து விடக்கூடாது என எண்ணியுள்ளனர் படக்குழுவினர்.

இதனால் படத்தில் குத்துச்சண்டை காட்சிகளில் உண்மையிலேயே அடி வாங்கியிருக்கிறார் ப்ரியங்கா.. மேலும் அவர்கள் சண்டை பயிற்சி கலைஞர்கள் இல்லை எனவும் அவர்களுக்கு பொய்யாக அடிக்க தெரியாது எனவும் புரிந்து கொண்ட ப்ரியங்கா இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்த அடிகளை உண்மையில் வாங்கும் போதுதான் மேரி கோமின் சாதனை எவ்வளவு அளப்பறியது என்பது எனக்கு புரிகிறது எனவும் நெகிழ்ந்துள்ளார் இந்த முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ரா..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!