100 கோடி வசூலை நோக்கி சல்மான் கானின் 'கிக்' சாதனை! | Salmankhan, KICK,Randeep Hooda, Jacqueline Fernandez, Sajid Nadiadwala

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (29/07/2014)

கடைசி தொடர்பு:15:38 (29/07/2014)

100 கோடி வசூலை நோக்கி சல்மான் கானின் 'கிக்' சாதனை!

தெலுங்கில் ரவி தேஜா, இலியானா மற்றும் ஷாம் நடித்து 2009 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் காமெடி படம் 'கிக்'.இதே படத்தை தமிழில் 'தில்லாலங்கடி' என்ற பெயரில் 'ஜெயம்' ரவி, தமன்னா, ஷாம் நடிப்பில் ரிமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்தப் படம் இந்தியில் 'கிக்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சல்மான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ரன்தீப் ஹூடா நடித்த இப்படத்தை சாஜித் நடியட்வாலா இயக்கினார். 

கடந்த ஜூலை 25ம் தேதி அன்று ரிலீஸ் ஆன  'கிக்' படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களில் 50 கோடிகளை வசூல் செய்த இப்படம் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மேலும் 47 கோடிகளை குவித்து மொத்தமாக 97 கோடிகளை வசூலித்துள்ளது.

வெறும் மூன்று நாட்களில் 100 கோடி க்ளப்பில் இணையும் மிகச்சில படங்களில் சல்மானின் 'கிக்' படமும் இணைந்துள்ளது. தெலுங்கு 'கிக்', தமிழ் 'தில்லாலங்கடி' என இரு படங்களின் முக்கிய அம்சமே காமெடிதான் .

இந்தி 'கிக்' படத்தில் காமெடி சற்று குறைவாக இருப்பினும் சல்மான் படம் என்றாலெ 100 கோடி வசூல் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் இந்த படமும் சோடை போகவில்லை. சல்மானின் முந்தைய படங்களை போல் இதுவும் கம்பீரமாக நூறு கோடி க்ளப்பில் இணைந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close