வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (30/07/2014)

கடைசி தொடர்பு:15:50 (30/07/2014)

முதல்முறையாக இணையும் இம்ரான்கான் , கங்கணா!

'கட்டி பட்டி' என்னும் படம் மூலம் முதல் முறையாக இம்ரான்கானும், கங்கணா ரணாவத்தும் இணைந்து நடிக்கின்றனர். யுடிவி நிறுவனம் தயாரிகும் இப்படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார்.

நிகில் அத்வானி ஏற்கனவே 'வெட்னஸ்டே' ,'டேவ் டி', 'பர்ஃபி', 'கை போ சி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.

'' அன்ஷுல் சிங்ஹால் எழுதிய இக்கதையை இயக்க சரியான இயக்குநரைத் தேடினோம். அப்போது எங்கள் எல்லாருடைய தேர்வாக நிகில்தான் இருந்தார். பின் அவரையே தேர்வு செய்தோம் '' என்கிறார் தயாரிப்பாளர் ஆதித்யா ராய் கபூர்.

இளம் வயதுக் காதல் மற்றும் இன்றைய உறவுகளை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்தில் இம்ரான் கான் 'மேடி' என்ற பெயரிலும் கங்கணா 'பாயல் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்